பாவைனைக்கு உதவாத 42 ஆயிரத்து 100 கிலோ கிராம் அரிசி புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் இந்த அரிசி மீட்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இருந்து இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, அதிகூடிய விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் இடங்களை தேடி 172 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 2 ஆயிரத்து 64 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனது.
சம்பவம் தொடர்பில் ஆயிரத்து 367 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

