எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

327 0

எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரி விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிலையான நிதிக்கொள்கை தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது உலகின் பல நாடுகள் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றன.

அதன் பிரதிபலன்களை சகலரும் அனுபவிக்க வேண்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள சுற்றாடல் பாதுகாப்பு மிக முக்கியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.