ஆந்திர பிரதேஷில் பேருந்து விபத்து – 8 பேர் பலி

327 0

இந்தியாவின் ஆந்திர பிரதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் குறைந்தபட்சம் எட்டு பேர் பலியாகினர்.

மேலும் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

புபனேஷ்வரில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விஜயவாடா பகுதியில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் நிலை பாரதூரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி தூக்கக் கலக்கத்துடன் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.