மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிரேஷ்ட மாணவர்கள் கைது

401 0

கண்டி வத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பாடசாலையை சேர்ந்த மூன்று சிரேஷ்ட மாணவர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கணிஷ்ட தர மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாணவ பயிற்சி முகாம் ஒன்றின்போதே இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயிற்சி முகாம் நிறைவடைந்ததன் பின்னர் நேற்றைய தினம் வீடுகளுக்கு சென்ற மாணவர்கள் தமது பெற்றோரிடம் அறிவித்ததை அடுத்து அவர்களால் காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த மூன்று மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.