கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெறுமாறு, தமிழகத்தின் முதலமைச்சர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடியை நேற்று தமிழக முதலமைச்சர் சந்தித்திருந்தார்.
இதன்போது தமிழகத்தின் பல்வேறு தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை அவர் முன்வைத்திருந்தார்.
அதில் கச்சத்தீவை மீட்குமாறும், இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

