உக்ரைனின் ஓவியங்களிற்கு அடைக்கலம் வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து

148 0

ஒரு வருடகாலத்திற்கு முன்னர் ரஸ்யா உக்ரைனிற்கு படைகளை அனுப்பியவேளை  உக்ரைனின் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் மனதில் தனது அருங்காட்சியகத்தில் உள்ள படங்களின் பாதுகாப்பு குறித்த சிந்தனை மாத்திரமே காணப்பட்டது.

சைரன்கள் அலறத்தொடங்கியதும் யூரிவகுலென்கோ கலரியை நோக்கி சென்றார்.

அடுத்த 66 நாட்கள் அவர் கலரியின் அடித்தளத்தில் தங்கியிருந்தார்- அங்கு ஒரு முகக்கவசமும் குண்டுதுளைக்காத அங்கியும் இருந்தது.

ஓவியங்கள் புழுதிபடிந்து பழுதுபடுவதை விரும்பாத அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்புகொண்டு உக்ரைனில் ஏற்கனவே இடம்பெற்ற கண்காட்சியின் நவீன வடிவத்தை நடத்துவதற்கு தயாரா என கேட்டார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரு அருங்காட்சியங்கங்கள்  இதற்கு இணங்கின.

இதன் மூலம் எங்கள் ஓவியங்களிற்கு பாதுகாப்பான இடம்கிடைக்கும் எங்கள் காட்சியகம் தொடர்ந்தும் கலாச்சார ரீதியில் போராடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என உக்ரைன்தலைநகரிலிருந்து வகுலென்கோ ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

1930 இல் ஸ்பெயின் உள்நாட்டு போரின் போது அந்த நாட்டின் ஓவியங்களிற்கு பாதுகாப்பு அளித்த ஜெனீவா அருங்காட்சியகம் உக்ரைன் அருங்காட்சியகத்தின் ஓவியங்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கான பொருட்களை அனுப்பியது.

தற்போது ஜெனீவாவில் உள்ள என்ற அமைப்பு உக்ரைன் ஓவியர்களின்  ஓவியங்களை அடிப்படையாக வைத்து  என்ற கண்காட்சியை நடத்துகின்றது.

 

உக்ரைனிலிருந்து ஓவியங்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்ட பின்னர்  எறிகணை காரணமாக அருங்காட்சியகத்திற்கு சேதம் ஏற்பட்டது அதன் இடிபாடுகளையும் சுவிட்சர்லாந்து அருங்காட்சியகம் பார்வைக்கு வைத்துள்ளது.

ஓவியங்களை போலந்து எல்லைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களாகின அவ்வேளை உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என அருங்காட்சியகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பொருட்கள் கப்பலில் அனுப்பப்படுவதை  இரகசியமாக வைத்திருக்கவேண்டியது முக்கியமான விடயமாக காணப்பட்டது, என தெரிவித்துள்ள அவர் ஒரு சிலருக்கு மாத்திரம் இது தெரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.