புலிகள் தியாகிகள் இல்லையாம்! – சிறிதரன் கேட்டுக்கொண்டிருக்க சுமத்திரன் கூறினார்!

555 0

blogger-image--1041926606பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து குரல் எழுப்பிய மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலனைக் கடிந்து பொத்திக்கொண்டிருக்க மிரட்டியுள்ளார் சிறீதரன்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் அண்மைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரபாகரனை தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார்.அவ்வேளையில் குறுக்கிட்டு தலையிட்ட சார்ள்ஸ் நிர்மலன் தேர்தல் காலத்தில் எங்களிற்கு பிரபாகரன் தேவைஇ புலிகள்இ மாவீரர்கள் தேவை. தேர்தலில் வென்ற பின்னர் அ வர்கள் தேவையில்லையாவென சீற்றமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாணசபை உறுப்பினர்கள் மௌனம் காத்திருக்க சிறீதரனோ மௌனமாக இருக்க ஆலோசனை தெரிவித்துள்ளார்.ஏனைய பலரும் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்திருந்ததாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தலைவர்களான மாவை சேனாதிராசா மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய இருவரும் வேடிக்கை பார்த்த இக்கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.