கருத்தரங்கம் – தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்.என்ன நடக்கிறது ஐ.நாவில்?

757 0

தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் சார்பில் 16/07/2016 சனி அன்று சென்னை தி.நகரில் நடத்தப்பட்டது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் ஈழ ஆதரவுப் போராட்டம் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், தோழர் திருமுருகன் தமிழினப்படுகொலையை மறைக்கும் சர்வதேச சதிகள், ஐ.நா வில் மே பதினேழு இயக்கம் சந்தித்த நேரடி அனுபவங்கள், விடுதலைக்காகப் போராடும் அனைத்து தேசிய இனங்களுக்கும் ஐ.நாவில் இழைக்கப்படும் துரோகம், நாம் எதிர்கொண்ட சிக்கல்கள், இனி எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் குறித்தும், நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் உரையாற்றினர்.

தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இக்கருத்தரங்கில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.




13669233_1366198010064321_2866697657116271006_n 13690804_1366198086730980_2965723178435041400_n 13697034_1366198106730978_1904997667323043566_n 13718724_1366198083397647_8743251729211155308_n 13731575_1366198013397654_6134095594172382851_n 13775340_1366198150064307_3288713711300877375_n 13776036_1366198030064319_797034384605916295_n