இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideaki ஆகியோர் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு 20 மில்லியன் லீற்றர் டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளது.

