மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 3.2 ரிச்டர் அளவில் இன்று (22) புதன்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கிறது.
இந்தப் பிரதேசத்தில் 3 ஆவது முறையாக பதிவான நிலநடுக்கம் இதுவாகும்.

