கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  வெற்றி – நாளை காணி விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

276 0

ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதற்கமைய மக்களின் காணிகள் நாளைய தினம் கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்ப்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபிலவு கிராம அலுவலர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள  42  ஏக்கர்   காணிகள் தொடர்பான அறிக்கைகள் பிரதேச செயலகத்தில் காணப்படுகிறது இந்த 42 ஏக்கர்  காணிகளும் நாளை விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள  எண்பத்திநான்கு   குடும்பங்களுக்கு சொந்தமான  காணிகள்    விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள   நிலையில், குறித்த காணிகளை நில அளவை திணைக்கள   அதிகாரிகள் இன்று காலை அளவீடு செய்தனர்.

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில்  ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது கடந்த 29 நாட்களாக இடம்பெற்ற இப்போராட்டம் சர்வதேச ரீதியாக பல்வேறு ஆதரவையும் பெற்ற நிலையில் உறுதியோடு மக்கள் போராடிவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது