பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம் 

381 0

 

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் செவ்வாய் கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

ஈழத்து  எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று  செவ்வாய் கிழமை அவரது  கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்று. இரணைமடு பொது மயாணத்தில் மாலை தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதி நிகழ்வில் சாந்தனோடு பணியாற்றி பல கலைஞர்கள்,  மற்றும் கலையுலக நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பெரும திரளான  பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.