புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை  முதலில் விடுவிக்க தீர்மானம்உணவுதவிர்ப்பு கைவிடப்பட்டு போராட்டம் தொடர்கிறது

295 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு  வாரத்திற்குள்  விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்த கணிக்குள் நான்காம் திகதி செல்ல அழைத்து செல்வதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்

எனினும் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஏழரை ஏக்கர் காணிக்குள் தாங்கள் கால்பதித்த பின்னரே  போராட்டத்தைக் கைவிடுவோம் எனவும் அதுவரை உணவுதவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தி தமது சாத்வீக தொடரப்போவதாக போராட்டத்திலீடுபடும்  மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன்   ஆகியோர் புதுக்குடியிருப்பில் கடந்த 26 ஆவது நாளாக நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இன்று மாலை   சந்தித்தனர்.

இதன்போது, முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரியினால்  மாவட்ட அரசாங்க அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் விடயங்கள் அடங்கிய கடிதமொன்று  பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறிதத் கடிதத்தில் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் கோரப்பட்டது

எனினும் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஏழரை ஏக்கர் காணிக்குள் தாங்கள் கால்பதித்த பின்னரே  போராட்டத்தைக் கைவிடுவோம் எனவும் அதுவரை உணவுதவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தி தமது சாத்வீக தொடரப்போவதாக போராட்டத்திலீடுபடும்  மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்புப் போராட்டம் இன்று இருபத்து ஆறாவது நாளை எட்டியுள்ளது.பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த 03 ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று 15 ஆவது நாளாக இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது