கொழும்பு தெமட்டகொட தர்மராம வீதி, காலிபுல்ல தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை கூரிய ஆயுதங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது கூரிய 13 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உரப்பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

