சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நடவடிக்கை – மஹிந்த

328 0
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மகிந்த ஆதரவு அணியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சந்திப்பு ஒன்று பெரும்பாலும் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் தமக்கு எதிராக உள்ள நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் அவர் இந்த சந்திப்புக்கான ஒழுங்குகளை செய்துவருவதாக கூறப்படுகிறது.