நிதி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

232 0
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். எச். சமரதுங்க மீண்டும் முன்னிலையாக உள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறித்து அரசாங்க பதில் அச்சகர் கங்கானி கல்பனா ஜனாதிபதி ஆணைக்குவிடம் சாட்சியமளித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 2015 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அறிவிக்கப்பட்டதாகவும், 2016 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.