துமிந்த சில்வா கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

267 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 4.30 மணியளவில் திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.