சம்பந்தன், பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் சந்திப்பு

240 0
பிரான்ஸின் செனட் சபை உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
குறிப்பாக காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை, அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகார மேம்படுத்தலுக்கான தேவைகள் போன்றவை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.