மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

