புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைப்பு

237 0
இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் ஒன்று கூடிய அரசியலமைப்பு சபை அவரது பெயரை தெரிவு செய்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.சிறிபவன் இன்றையதினத்துடன் ஓய்வு பெறுகிறார்.
39 ஆண்டு காலம் நீதித்துறையில் செயற்பட்டு வரும் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ம் திகதி பிறந்த அவர், யாழ்ப்பாண இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார்.
1978ம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார்.
அத்துடன் அவர் 2002ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும், 2008ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.
தமது 65வது வயதில் இன்றுடன் ஓய்வு பெறுகின்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.