ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுத்த நபர்

238 0
அமெரிக்க விசேட கடற்படை பிரிவினரால் கடந்த மாதம் யேமனில் மேற்கொள்ளப்பட்ட விசேட தாக்குதலில் பலியானவரின் தந்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று ஒரு சில நாட்களில், யேமனில் உள்ள ஹல்கைதா நிலையை தாக்குவதற்கான முதலாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நிர்வாகத்தை பொறுப்பேற்று ஒரு வாரகால பகுதியினுள் வெளிநாடொன்றில் விசேட தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் யேமனில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை என கொல்லப்பட்டவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அனாவசிய உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதியை சந்திக்க தாம் விரும்பவில்லை என மியாமி ஹெரால்ட்யிற்கு வழங்கிய செவ்வியில் பலியானவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த விசேட இராணுவ நடவடிக்கை குறித்தும், தனது புதல்வர் பலியானது தொடர்பாகவும் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.