வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரணாகொடவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வசந்த கரணாகொட பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.

