மாத்தறையில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு!

204 0

மாத்தறையின் திஹாகொட,  கொட்டாவத்தை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 48 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.

இவரது இரண்டு மாடி வீட்டின் தோட்டத்தில் 5 அடி ஆழத்துக்கு இரண்டு குழிகள் வெட்டப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.