முல்லைத்தீவு, கரைத்துரைபற்று வேட்புமனு நிராகரிப்பு: அறிக்கை கோரும் நீதிமன்றம்!

24 0

முல்லைத்தீவு, கரைத்துரைபற்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை நாளை (8) பிற்பகல் 2 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரைத்துரைபற்று உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.