மக்கள் அனைவரும் வரவேற்கும் வகையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்

22 0

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்றுவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது அவசியமானது. அதேநேரத்தில், மக்கள் அனைவரும் வரவேற்கும் வகையில் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும்.

இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில்கொண்டு, உரிய முடிவு எடுப்பார். விசிக மாவட்டப் பொறுப்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.