இலங்கையில் தொழில் புரிவோருக்கான சராசரி வேதன வழங்கல், வீழ்ச்சி

211 0

2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொழில் புரிவோருக்கான சராசரி வேதன வழங்கல், வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிற்சங்க குடை என்ற அமைப்பின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, த கார்டியன் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலக நாடுகளில் தொழில்புரிவோருக்கான வேதன அதிகரிப்பு சராசரியைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை 112ஆம் இடத்தில் உள்ளது.

இதன்படி இலங்கையில் 4.2 சதவீத சராசரி வேதன வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.