பொதுநலவாயம் இலங்கையுடன் உள்ளது – அதன் செயலாளர் நாயகம் கருத்து

102 0

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு பொதுநலவாயத்தின் ஆதரவுள்ளது என அதன் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லான்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார அரசியல் அழுத்தங்களின் சுமையை தொடாந்தும் எதிர்கொள்வது எனக்கு தெரியும்,இந்த அழுத்தம் தாங்க முடியாததது என தெரிவித்துள்ள அவர்அது ஸ்திரதன்மை இழக்கச்செய்வதாகவும் தனிமைப்படுத்துவதாகவும் அச்சமூட்டுவதாகவும் காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் இந்த நெருக்கடியின் போது தனியாக இல்லை இந்த பெறுமதி மிக்க பொதுநலவாய குடும்பத்தின் ஒரு பகுதி நீங்கள் என அனைத்து இலங்கையர்களிற்கும் தெரிவிப்பதற்காகவே நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் எங்களிற்கு ஒருவருக்கான மற்றையவரின் பொறுப்புள்ளது ஏனையவர்களிற்கான கடமையுள்ளது பகிர்ந்துகொள்ளப்பட்ட பயணமும் அன்பும் உள்ளது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களின் போது நீங்கள் தனியாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் உலக நாடுகள் கொவிட் பெருந்தொற்றினால் உருவான சமூக பொருளாhதார அரசியல் விளைவுகளை எதிர்கொண்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அழுத்தத்திற்குள்ளாகியுள்ள நாட்டில் வாழ்வதாக நீங்கள் கருதலாம் ஆனால் நாங்கள் அழுத்தத்திற்குள்ளாகியுள்ள உலகில் வாழ்கின்றோம் என்பதே யதார்த்தம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.