இலங்கையில் முதலீடுகளை செய்ய ஜப்பானியர்கள் அதிக ஆர்வம்!

218 0

இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளில் தீவிர தன்மையை கடைப்பிடிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. ஜப்பான், எப்போதும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி வருகிறது.

எனினும் இலங்கையை பொறுத்தவரை முதலீடுகளுக்கான கொள்கையில் ஸ்திரமற்ற நிலை இருப்பதாக ஜப்பானிய வர்த்தகத்துறையினர் கருதுவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜப்பானின் 60 நிறுவனங்கள் இலங்கையில் இயங்குகின்றன. அவற்றில் 12ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.