உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம்…!

212 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பதவியை மாற்றுவதற்குரிய முயற்சிக்கு அக்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாகவே அமைச்சரவை மாற்றம் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அமைச்சரவை மாற்றத்தைச் செய்யுமாறு அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.