நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…(காணொளி)

253 0

நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் இப்பிரதேசங்களில் நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும்போக நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட கூடுதலான விலை சந்தையில் காணப்படுவதே இதற்கான காரணம் என அவர் தெரிவித்தார்.

எனினும் அடுத்த மாத ஆரம்ப பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் முன்வருவார்கள் எனவும் அதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராவுள்ளதாக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது சபையிடம் இருக்கும் நெல் சதொச நிறுவனத்திற்கு மாத்திரம் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 30 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் சதொசவுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் 35 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் சதொச நிறுவனத்திற்கு விற்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.