தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவனுக்கு தீ காயம்!

183 0

பேருவளையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததுடன் தீயை அணைக்கச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் 28 மற்றும் 24 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (24) பகல் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மனைவி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் தீயை அணைக்கச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .