புதையலில் கிடைத்த தொல் பொருட்களை விற்க முயன்றவர்கள் கைது

228 0

களுத்துறை வடக்கு பிரிவில் உள்ள ஹொட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் பாணந்துறை மத்திய மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது புதையலில் எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல் பொருட்களை விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்த மூன்று பேரை தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் சுகாதார காரணத்தின் அடிப்படையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 34 வயதான இராணுவ வீரர் என்பதுடன் ஏனையோர் 36 மற்றும் 42 வயதான கந்தர மற்றும் களுவாமோதர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த பொருட்களை அவர்கள் மூன்று கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்துள்ளது.

புதையலில் கிடைத்த தொல் பொருட்களை விற்க முயன்றவர்கள் கைது | Tried To Sell Antiques Found In The Treasure

சந்தேக நபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்ததுடன் களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் பாணந்துறை மத்திய மோசடி தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை றேமற்கொண்டு வருகின்றனர்.