அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு நாளை வரை (27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதித்துள்ளார்.
அத்துடன், இவ்வருடத்தில் கட்சியாக இருந்து முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம, உதவிச் செயலாளர் ருவன் விஜேவர்தன, மகளிர் பிரிவு தலைவி அனோமா கமகே, இளைஞர் முன்னணியின் தலைவர் அகில விராஜ்காரியவசம், தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகியோரிடமே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

