டக்ளஸின் அலுவலகத்தின் மின் கட்டண நிலுவையை கட்டுமாறு கடிதம்

321 0
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை    85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபாவினை செலுத்துமாறு அறுவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக இ.மி.சபையின் யாழ். மாவட்ட படிப்பாளர் ஞாணகணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
ஈ.பீ.டீ.பியினரின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டறிற்கு கடந்த 1998ம் ஆண்டு முதல் மின் விநியோகம் இடம்பெறுகின்றது. இவ்வாறு விநியோகம் இடம்பெறும் நாள்முதல் இன்றைவரையில் செலுத்தப்படாத மீதியாக
85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் இன்னமும் நிலுவையில் உள்ளது.
அவ்வாறு கானப்படும் நிலுவை தொடர்பினில்  உடன் கவனம் செலுத்தி உரிய பணத்தினை செலுத்துமாறும் தற்போது எழுத்தில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த தொகை நிலுவையானது அதிக தொகையில்  உள்ளபோதிலும் அப் பாவனையாளர் முன்னாள் அமைச்சராகவும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளமையினால் எம்மால் அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள முடியவில்லை. இதனாலேயே எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தின் பணியாளர்கள் இ.மி.சபைக்கு வருகை தந்து இறுதி மீதி தொடர்பிலும் உறுதிப்படுத்தி சென்றுள்ளனர்.
இவ்வாறு உறுதிப்படுத்திச் சென்றபோதும் எந்தவிதமான கொடுப்பனவுகளும் செலுத்தப்படாது நிலுவை அப்படியே உள்ளது. இருப்பினும் இக் கட்டணத்தினை எவ்வாறு அறவிடுவது என்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படுகின்றது. என்றார்.