முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

378 0
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட தப்பி ஓடியமையினால் உயிர் தப்பினர்.
இது தொடர்பினில் மேலும் தெரிய வருவது ,
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கரிப்பட்டமுறிப்பு பகுதியில் உள்ள வயல் ஒன்றிற்கு நேற்று முன்தினம் மாலை நெல் ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்தினில் சாரதியும் மேலும் சிலரும் சென்றுள்ளனர். அதன்போது பாதையின் அருகில் உள்ள ஓர் குளத்தினில் நீர் அருந்திய சிறுத்தையை உழவு இயந்திரத்தின் சத்தம்கேட்டு நகர்வதனை அவதானித்துள்ளனர். இருப்பினும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் பயணித்த தொழிலாளிகள் சிறுத்தையிடம் இருந்து தப்பும் நோக்கில் குதித்து ஓடியுள்ளனர்.
இவ்வாறு குதித்து ஓடியவர்களில் ஒருவர் கால் சறுக்கி வீக்கத்தின் காரணமாக தற்போது நடப்பதற்கு பெரும் சிரமத்துடன் உள்ளபோதும் எதுவித உயிர்ச் சேதங்களும் இன்றி உழவு இயந்திரத்தில் பயணித்த ஆறுபேரும் தப்பிக்கொண்டனர். இதே நேரம்  நேற்று இரவு இரவு கரிப்பட்ட முறிப்பு பகுதியில் ஒரு வீட்டின் கோழிக் கூட்டிற்குள் நுழைத்த சிறுத்தை அக் கூட்டில் இருந்த 18 கோழிகளில் 11  கோழிகளையும் உணவாக்கியுள்ளது.இதன் காரணமாக அம்பகாம்ம் காட்டுப்பகுதியில் நிலவிய சிறுத்தையின் அச்சம் தற்போது கரிப்பட்டமுறிப்பு பகுதிக்கும் பரவியுள்ளது.
இவ்வாறு குறித்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்களினால் தெரிவிக்கக்படுவது தொடர்பில் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் அநிருத்தன்னிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
எமற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் எனது கவனத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த இரு தினங்களுமே விடுமுறை தினம் என்பதனால் அலுவலக ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளாத போதிலும் உடனடியாகவே தொலைபேசியின் ஊடாக வன ஜீவராசித் திணைக்களத்தினருக்கு தகவல. வழங்கப்பட்டுள்ளது. என்றார்.-