பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுத்துள்ள கோரிக்கை

106 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) அன்று இரவு கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ 9 வீதிப்பகுதியில் இரவு 10.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இடம் பெற்ற வாகன விபத்தில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது.

விலங்குகள் நடமாடும் பகுதிகளில் இரவு நேரத்தில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த விலங்கின் உயிர் பறிபோயுள்ளதாகவும் கரடியின் மரணம் தொடர்பாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

விலங்குகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும் எனவும் குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் வழியாக இரவில் வாகனம் செலுத்தும் போது விலங்கினங்களின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு வாகனத்தினை செலுத்துமாறும் மக்கள் மற்றும்  வாகன சாரதிகளிடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர் .