சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு தமிழ் பெண்களுக்கு சாதனைப் பெண்கள் விருது

135 0

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தமிழ் பெண்களை ஊக்குவிக்கும் விதமாகவும், உத்வேகம் கொடுக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது  ‘சாதனை பெண்கள் விருது’ (FABULOUS FEMININE AWARDS).

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும், அனைத்து துறைகளிலும் துறை சார்ந்த வல்லுனர்களாக பெண்கள் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இரண்டாம் ஆண்டு ‘சாதனை பெண்கள் விருது’ மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

அந்நிகழ்வில் மருத்துவம், பொறியியல், விண்வெளி, அரசியல், IAS, IPS, IFS, IRS, தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பெண் வல்லுநர்களுக்கு ‘சாதனைப் பெண்கள் விருது’ வழங்கப்பட உள்ளது.

அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரை பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பெண் ஆளுமைகள் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் பெண்களை அழைத்து சாதனைப் பெண்கள் விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வினைப்பற்றி மேலும் விவரம் அறிய  gotoorganisation@gmail.com மற்றும் whatsapp +60166167708 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் இணையதள மூலம் பன்னாட்டு ஊடகங்களை நேர்காணல் கண்டார்.