இஸ்ரேலிய சிறையிலிருந்து 40 வருடங்களின் பின் பலஸ்தீன கைதி விடுதலை

77 0

இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கொலை செய்தமைக்காக சிறையிலடைக்கப்பட்ட பலஸ்தீன கைதி ஒருவர் 40 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான மஹேர் யூனிஸ் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு, கோலான் குன்றுகள் பகுதியில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான வழக்கில் மஹேர் யூனி; குற்றவாளியாக காப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் 40 வருட சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.

இஸ்ரேலின் தென் பகுதியிலுள்ள பீர் ஷெபா சிறைச்சாலையலிருந்து இன்று காலை மஹேர் யூனிஸ் விடுவிக்கப்பட்டார் என பலஸ்தீன கைதிகள் கழகம் தெரிவித்துள்ளது.