கொழும்பு பல்கலை மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

156 0

கொழும்பில் உள்ள குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவரை கழுத்தறுத்து கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமளியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

17 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கொழும்பு – 7 இல் அமைந்துள்ள  குதிரைப் பந்தய திடலின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று மாலை குறித்த யுவதியை கொலை செய்ததாக சந்தேகிகப்படும், கொழும்பு பல்கலைக் கழகத்தின் கலை பீட மாணவனான  வெல்லம்பிட்டி – கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்  கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேநபர் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதையடுத்தே அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.