அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்ட சிவில் உறுப்பினர்கள் மூவருக்கும் பாராளுமன்றம் அனுமதி

155 0

புதிதாக அமைக்கப்படவுள்ள  அரசியலமைப்புபேரவைக்கு சிவில் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத, கலாநிதி பிரதாப் இராமானுஜம், வைத்தியர் தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த பிரரேரணைக்கு பாராளுமன்றம் இன்று (ஜன 18) அனுமதி வழங்கியது.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்த்தன விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு, அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் 1ஆம் உப உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரினாலும்  இந்த சிவில் உறுப்பினர்கள் 3 பேரும் பெயரிடப்படுவதாக சபைக்கு அறிவித்து அதற்கான அனுமதியை கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய பாராளுமன்றம் குறித்த சிவில் பிரதிநிதிகள் 3 பேருக்கும் அனுமதி வழங்கியது.