கொழும்பு – புறக்கோட்டையில் அரிசி கைப்பற்றல்

260 0

கொழும்பு – புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 3 ஆயிரம் கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் குறித்த அரிசி நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், காலாவதியான 2 ஆயிரத்து 600 கிலோ கிராம் அரிசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் நேற்று 55 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றுள், அரிசி விற்பனையில் மோசடியில் ஈடுபட்ட 33 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கைத்தொழில் மற்றம் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுமுழுவதும் மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 265 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.