அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு – லக்ஷ்மன் கிரியெல்ல

330 0

அனைத்து கட்சிகளினது அங்கிகாரத்துடனேயே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாடு பிளவுபடுத்தப்படுவதாகவும், புத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படுவதாகவும் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது.

அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டில் சமத்துவம் நிறைந்த சமூகம் ஒன்றை உருவாக்கவே அரசாங்கம் முனைகின்றது.

புதிய அரசியல் அமைப்பின் மூலம் அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியல் அமைப்பின் உருவாக்கப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதின் பின்னர் மக்கள் கருத்துக்கணிப்பிற்கு விடப்படும்.

அத்துடன் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.