சிரியாவில் இரட்டை தற்கொலைக் குண்டு தாக்குதல் – 42 பேர் பலி

323 0

சிரியாவில் இன்று இடம்பெற்ற இரட்டை தற்கொலைக் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியாகினர்.

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இந்த இரட்டைக் குண்டுவெடிப்பு இடம்பெற்றது.

சிரியா நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசமுள்ள பல முக்கிய நகரங்களை அந்த நாட்டு அரசாங்க படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சில பிரதேசங்களில் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே, ஹோம்ஸ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல்களில் பலர் படுகாயமடைந்ததுடன் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடாக இருக்கலாம் என சிரிய பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.