ஐ.நா ஆணையாளருக்கு சமர்பிக்க மனு – வடமாகாணசபை தயாரித்து வருகிறது.

362 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்பிப்பதற்கான மனு ஒன்றிணை வடமாகாணசபை தயாரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய நலன்சார்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய கோரிக்கையாக இந்த மனு அமையவுள்ளது.

இந்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி மாகாணசபை அமர்வில் அங்கீகரிக்கப்பட்டு மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.