புதிய தேர்தல் முறை பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் – அமைச்சர் மனோ கணேசன்

337 0

புதிய தேர்தல் முறையானது இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய கலப்பு தேர்தல் முறை, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாது ஒழித்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறை தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளும் உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள அதேவேளை ஜேவிபியும் புதிய கலப்பு முறைமையை நிராகரித்துள்ளது.

அத்துடன் புதிய முறையின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையும்.

இதுதவிர, இந்த முறையின் மூலம் உள்ளுராட்சிமன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மன்றங்களில் இடவசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.