கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில்; ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கூடட்ம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பட்டதாரிகளுக்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை உயர்த்துதல் தொடர்பான தீர்மானமும் ஆளுனரிடம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வருடாந்தம் பட்டதாரிகளை உள்வாங்குவாற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் வலியுறத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

