பலபிட்டிய பிரதேசத்தில் விடுதியொன்றில் ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மது ஒழிப்புப் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
சந்தேகநபர் கோட்டை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மது ஒழிப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றின்போது குறித்த பாகிஸ்தானியர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

