காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

320 0

மட்டக்களப்பு – பதுளை வீதியின் கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள புத்தம்புரி ஆறு வயற் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் புத்தம்புரி ஆற்றருகில் நின்றுகொண்டிருந்தபோதே யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கரடியனாறு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.