மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத்தின் பணி இடைநீக்கம் கடந்த 10 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துக்கு அமைய பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

