தென்னாப்பிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையை கணடறியும் நல்லிணக்க பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இந்த பொறிமுறை அமுல்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களான ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர்.
எனினும் இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
எனவே இது தமிழ் மக்களை பாதிக்கும் வகையிலும், பக்கச்சார்பானதாகவும் அமைய வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே சர்வதேச விசாரணை என்பது முக்கியத்துவப்படுவதாக சிவமோகன் கூறியுள்ளார்.

